பிரபல காமெடி நடிகர் முத்துராஜா இவரை வாளமீன் முத்து ராஜா என்று அழைப்பது உண்டு. சித்திரம் பேசுதடி படத்தில் இடம் பெற்ற வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் முத்துராஜா நடித்து இருந்தார். இதில் உலகநாதன் பாடும்போது முழுக்க அவருக்கு மைக் பிடித்தபடி நடித்தார்.
மேலும் வெளுத்துக்கட்டு, வேங்கை, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, மருதவேலு, உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முத்துராஜாவுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி திருமணம் நடந்தது. மனைவியுடன் சொந்த ஊரான தேனி கே.கே. பட்டியில் தங்கி இருந்தார். இரு தினங்களுக்கு முன் வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?