வாய்ப்புக்காக கண்டபடி பேட்டி கொடுத்து பொய் சொல்கிறார் அசின் என கோபமாகத் திட்டியுள்ளார் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.
சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கப் போகிறார் ரோஹித் ஷெட்டி. இதில் ஷாரூக்கான்தான் ஹீரோ.
இந்தப் படத்தில் யார் ஹீரோயின் என்பதில் இப்போதே பெரும் போட்டி கிளம்பிவிட்டது.
ஆளாலுக்கு நான் நீ என பேட்டி கொடுத்து வருகிறார்கள். ஆனால் இப்போது போல் பச்சன் என்ற படத்தை இயக்கி வரும் ரோஹித் ஷெட்டி இன்னும் ஹீரோயினை முடிவு செய்யவே இல்லையாம்.
இந்தப் படத்தில் நடிப்பதாக கரீனா கபூர், தீபிகா படுகோன் இருவரும் கூறியதாக செய்தி வந்ததை மறுத்துவிட்டார் ரோஹித்.
இதற்கிடையே, அவரது போல் பச்சானில் நாயகியாக நடித்து வரும அசின், தான்தான் சென்னை எக்ஸ்பிரஸ் நாயகி என்றும், ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்றும் கூறியதாக செய்திகள் வர டென்ஷனாகிவிட்டார் இயக்குநர்.
'அசின் சொல்லியிருப்பது பொய். போல் பச்சனில் நடிப்பதால் அவர் சென்னை எக்ஸ்பிரஸிலும் ஹீரோயின் என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது.
இப்போதைக்கு போல் பச்சான் முடித்தபிறகுதான், சென்னை எக்ஸ்பிரஸ் குறித்துப் பேசுவேன். அதுவரை தீபிகா – அசின் இருவர் சொல்வதையும் நம்ப வேண்டாம்," என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?