Sunday, 22 September 2013

மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் படத்தில் நாயகியாக சமந்தா! Samantha act with 3 generation actors

மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் படத்தில் நாயகியாக சமந்தா!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான நாகேஸ்வரராவ் தற்போது மனம் என்ற படத்தில் நடிக்கிறார். இதேபடத்தில் அவரது மகனான நாகார்ஜூனா, பேரனான நாக சைதன்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். தாத்தா, மகன், பேரன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்த படத்தை தமிழில் யாவரும் நலம், அலை போன்ற படங்களை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்குகிறார். மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதால், இந்த படத்தில் நடிப்பதற்கு தெலுங்கு நடிகைகள் மத்தியில் பலத்த போட்டி நிலவியது. அதிலும், பேரன் நாக சைதன்யாவின் கேரக்டர் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அவருடன் நடிக்க அமலாபால், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் பலத்த போட்டியில் ஈடுபட்டார்களாம். ஆனால், இவர்களின் எந்த நடிகையை நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலனை நடந்தபோது, சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்று தானே முன்வந்து சொன்னாராம் நாக சைதன்யா. அதோடு, இந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமானவர் மட்டுமின்றி, சிறப்பான நடிப்பினால் என்னை பலமுறை கவர்ந்த நடிகை அவர் என்றும் சொன்னாராம். இந்த சேதி கேட்டு உருகிப்போன சமந்தா, கதையை கேட்டதோடு சரி, சம்பளம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறாராம்.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger