சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி Champions league cricket chennai super kings win
Tamil NewsYesterday
ராஞ்சி, செப்.23-
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த மற்றொரு 'பி' பிரிவு ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டைட்டன்ஸ் அணியை சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து கேப்டன் ஹென்ரி டேவிட்ஸ், ருடால்ப் ஆகியோர் டைட்டன்ஸ் அணியின் இன்னிங்சை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் திரட்டிய இந்த ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்தது. ருடால்ப் 21 ரன்னில் வெளியேறினார்.
இதன் பின்னர் டேவிட்சுடன், டிவில்லியர்ஸ் கூட்டணி அமைத்தார். முதல் 10 ஓவர்களில் ரன்வேகம் (72 ரன்) ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால் டிவில்லியர்ஸ் வாணவேடிக்கை காட்டத் தொடங்கியதும், டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. 30 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த டிவில்லியர்சை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை பவுலர்கள் விழிபிதுங்கி நின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் ஓவர்களில் மட்டும் 4 சிக்சர்களை ஓட விட்டார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரரான டிவில்லியர்ஸ் அந்த அணி சாம்பியன்ஸ் லீக்குக்கு தகுதி பெறாததால் இந்த முறை தனது சொந்த ஊர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இறுதியில் அவர் 77 ரன்களில் (36 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார். இதற்கிடையே கேப்டன் டேவிட்ஸ் 52 ரன்களில் (43 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.
பின்னர் 186 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹஸ்சியும், முரளிவிஜயும் களம் புகுந்தனர். 3-வது பந்திலேயே விஜய் (0) நடையை கட்டினார். அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். அவரும், மைக் ஹஸ்சியும் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சை சின்னாபின்னமாக்கினார்கள்.
இதனால் 4-வது ஓவரிலேயே சென்னை அணியின் ஸ்கோர் 50 ரன்களை தொட்டது. பவுண்டரியும், சிக்சருமாக விளாசி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்திய இவர்கள், அணியின் வெற்றிப்பாதைக்கு வலிமையான ஒரு அடித்தளம் அமைத்து தந்தனர். ஸ்கோர் 95 ரன்களை எட்டிய போது, ரெய்னா 47 ரன்களில் (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.
சிறிது நேரத்தில் ஹஸ்சியும் (47 ரன், 26 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட்டை பறிகொடுத்தார். என்றாலும் பின்னால் வந்த வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் நாயகன் டோனி 7 ரன்னில் (8 பந்து, ஒரு சிக்சர்) ஏமாற்றம் அளித்தார்.
முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. டைட்டன்ஸ் பவுலர்கள் எக்ஸ்டிரா வகையில் 24 வைடுகளை வாரி வழங்கியதும், சென்னை அணி இமாலய ஸ்கோரை 'சேசிங்' செய்ய துணைபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணி தனது 2-வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வருகிற 26-ந்தேதி எதிர்கொள்கிறது.
ஸ்கோர் போர்டு டைட்டன்ஸ்
டேவிட்ஸ்(ஸ்டம்பிங்) டோனி
(பி) அஸ்வின் 52
ருடால்ப் (ரன்-அவுட்) 21
டிவில்லியர்ஸ் (சி) பிராவோ
(பி) ஜடேஜா 77
பெஹர்டைன் (சி)
ஹோல்டர் (பி) பிராவோ 21
டேவிட் வைஸ் (சி)
அஸ்வின் (பி) பிராவோ 0
வான் டெர் மெர்வ் (நாட்-அவுட்) 1
மோசெலே (நாட்-அவுட்) 4
எக்ஸ்டிரா 9
மொத்தம் (20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 185 விக்கெட் வீழ்ச்சி: 1-46, 2-122, 3-154, 4-154, 5-179 பந்து வீச்சு விவரம் மொகித் ஷர்மா 4-0-27-0, ஜாசன் ஹோல்டர் 4-0-25-0, அஸ்வின் 4-0-36-1, அல்பி மோர்கல் 1-0-8-0, ஜடேஜா 3-0-49-1, பிராவோ 4-0-34-2
சென்னை சூப்பர் கிங்ஸ்
மைக் ஹஸ்சி(சி)
டிவில்லியர்ஸ் (பி)
மோர்னே மோர்கல் 47
விஜய் (பி) மெர்வ் 0
ரெய்னா (சி) மோர்னே
மோர்கல் (பி) வைஸ் 47
பத்ரிநாத் (நாட்-அவுட்) 20
பிராவோ (சி) மோசெலே
(பி) ரிச்சர்ட்ஸ் 38
டோனி (சி) டிவில்லியர்ஸ்
(பி) ரிச்சர்ட்ஸ் 7
ஜடேஜா (பி) ரிச்சர்ட்ஸ் 0
அல்பிமோர்கல்(நாட்-அவுட்) 4
எக்ஸ்டிரா 24 மொத்தம் (18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 187 விக்கெட் வீழ்ச்சி: 1-6, 2-95, 3-114, 4-172, 5-181, 6-183 பந்து வீச்சு விவரம் வான் டெர் மெர்வ் 3-0-25-1, மோர்னே மோர்கல் 4-0-47-1, ரிச்சர்ட்ஸ் 3.5-0-29-3, டி லாங்கே 3-0-34-0, டேவிட் வைஸ் 3-0-29-1, ஹென்ரி டேவிட்ஸ் 2-0-23-0,
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?