சென்னை கீழ்ப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து chennai kilpauk apartment sudden fire
Tamil NewsYesterday, 05:30
சென்னை, செப்.22-
சென்னை கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று மதியம் திடீரென்று தீப்பிடித்தது. அக்குடியிருப்பின் 5-வது மாடியில் பிடித்த தீ 6, 7-வது மாடிக்கும் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். மொத்தம் 4 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்திற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ மளமளவென எரிந்து வருவதால் அதிக சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீ பிடித்துக் கொண்டிருக்கும் மாடியில் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பது குறித்தும் தகவல் ஏதும் தெரியவில்லை.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?