Tuesday, 6 August 2013

கள்ளக் காதலியின் 2 மாத குழந்தையை ஆன்லைனில் 100 டாலருக்கு விற்க முயன்றவன் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பால் மார்குவெஸ்(23) என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ஆன் லைன் மூலம் ஓர் இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆனார்.

கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்த அந்த பெண்ணுடன் பால் மார்குவெஸ் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு ஒரே வீட்டில் சந்தோஷமாக வசித்து வந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கள்ளக் காதலிக்கு பழைய கணவன் மூலம் கருத்தரித்த குழந்தை பிறந்தது.


அந்த பெண் குழந்தை பிறந்தவுடன் தன்னுடனான அன்பையும், நெருக்கத்தையும் காதலி குறைத்துக் கொண்டதாக பால் மார்குவெஸ் கருதினார்.

தனது மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை என்ன செய்வது? என்று யோசித்த அவர் ஆன் லைன் மூலம் விற்றுவிட தீர்மானித்தார்.

குழந்தையின் தாயிடம் இதுபற்றி ஆலோசிக்காமல் 2 மாத பெண் குழந்தை 100 டாலர் விலைக்கு விற்கப்படும். தொடர்பு கொள்ளவும்... என ஆன் லைனில் அறிவிப்பு வெளியிட்ட அவர், கள்ளக் காதலியின் கைபேசி எண்ணை தொடர்புக்கான எண்ணாக விளம்பரப்படுத்தியிருந்தார்.

இதையடுத்து, அந்த குழந்தையை விலைக்கு வாங்கிக் கொள்வதற்காக ஏகப்பட்ட அழைப்புகள் வரத் தொடங்கின. காதலரின் செயலை அறிந்து மனம் கொதித்த அவர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

பால் மார்குவெசை உடனடியாக கைது செய்த போலீசார், சாடென் தீவு கோர்ட்டில் அவரை ஆஜர் படுத்தினார். குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதால் ஆயிரம் டாலர்கள் செலுத்தி ஜாமினில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், ஜாமின் தொகை கட்ட தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று பால் மார்குவெஸ் கூறியதால் வழக்கு முடியும் வரை சிறையில் அடைத்து வைக்கும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger