Img விபரீதத்தில் முடிந்த இனப்பெருக்க முயற்சி: வெறி கொண்ட ஆண் புலி கடித்துக் குதறியதில் ஜோடிப் புலி பரிதாப பலி tigress killed while mating in sandiego zoo
நியூயார்க், டிச.24-
உலகின் அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் மலாய் புலிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வகை புலிகள் 500 மட்டுமே உயிர் வாழ்வதாக கருதப்படுகிறது.
வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் சன்டியாகோவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் இவ்வகை புலிகள் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. உரிய பருவத்தை எட்டியதும் இவ்வகை புலிகளை வனவிலங்கு காப்பக ஊழியர்கள் இனப்பெருக்கத்துக்கு தயார் செய்கின்றனர்.
அவ்வகையில், 2 வயதான கொன்னோர் என்ற ஆண் புலியின் கூண்டை டிகா டகுன் என்ற பெண் புலியின் கூண்டின் அருகே கடந்த மாதம் மாற்றி அமைத்தனர். கடந்த சில வாரங்களாக இளம் புலிகள் இரண்டும் தனித்தனி கூண்டில் இருந்தவாறே ஒன்றையொன்று முகர்ந்துப் பார்த்தும், முத்தமிட்டும் கொஞ்சி மகிழ்ந்தன.
இனப்பெருக்கத்துக்கு அவை தயாராகி விட்டதற்கான அறிகுறிகள் தோன்றவே, 2 புலிகளும் சற்று விசாலமான ஒரே கூண்டுக்குள் அடைக்கப்பட்டன.
பெண் புலியை நெருங்கி சற்று நேரம் விளையாடி மகிழ்ந்த ஆண் புலி, தனது இச்சையை தீர்த்துக் கொள்ள ஆவேசமாக டிகா டகுன் மேல் பாய்ந்தது. அதன் வீரியத்தை கண்டு பயந்துப் போன டிகா டகுன், சிணுங்கலுடன் ஒதுங்க ஆரம்பித்தது.
காம வெறி தலைக்கேறிய நிலையில் இருந்த கொன்னோருக்கு தன்னுடன் சேர்க்கைக்கு வராமல் முரண்டு பிடிக்கும் டிகா டகுனின் செயல் ஆத்திரத்தை வரவழைத்தது. சற்றும் எதிர்பாராத வகையில் டிகா டகுனின் மீது பாய்ந்த கொன்னோர், அதன் கழுத்தை வெறியுடன் கடித்துக் குதறி எடுத்தது.
இதை பார்த்து அதிர்ந்துப் போன வனவிலங்கு காப்பக ஊழியர்கள், கூண்டை திறந்து உள்ளே சென்று, டிகா டகுனை காப்பாற்ற முயன்றனர். அதற்குள், சுவாசக் குழாய்க்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்ட நிலயில் டிகா டகுன் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானது.
கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல்பாசோ வனவிலங்கு காப்பகத்தில் நிகழ்ந்த இதேப் போன்ற சம்பவத்திலும் ஆண் புலியிடம் கடிபட்டு இவ்வகை பெண் மலாய் புலி பலியானது குறிப்பிடத்தக்கது.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?