Img பலாத்காரம் செய்ய முயற்சி: பெண்ணின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிய வாலிபர் ஓட்டம் Tried to harassment womens karate kick man run
தெவனகரெ, டிச.24-
மத்திய கர்நாடகாவிலுள்ள தெவனகரெவில் 19 வயது மாணவியை கற்பழிக்க முயன்ற நண்பன், மாணவியின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.
தெவனகரெவில் உள்ள கல்லூரியில் படித்து வந்த அப்பெண், கல்லூரியின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தனது தங்கையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அம்மாணவிக்கு, ஏற்கனவே அறிமுகமான தனியார் கல்லூரியை சேர்ந்த பிரித்வி என்ற மாணவன், இருவரையும் வழிமறித்தான். பின்னர் அந்த மாணவியை வீட்டில் கொண்டுவந்து விடுவதாக அவரது சகோதரியிடம் கூறிய அந்த மாணவன், தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றான்.
அங்கு அம்மாணவியிடம் அவன் தவறாக நடக்க முயன்றுள்ளான். மாணவி அதற்கு உடன்படவில்லை. பலாத்காரம் செய்ய அவன் முயன்ற போது, மாணவி அவனை, தான் கற்று வைத்திருந்த கராத்தே கலையை அவனிடம் காண்பித்தார். சகட்டு மேனிக்கு உதை வாங்கிய மாணவன் நிலைகுலைந்த சமயத்தில், அங்கிருந்த பெரிய கல்லை கொண்டு அவன் தலையை பலமாக தாக்கினார் அம்மாணவி. மாணவியை அவனும் முகத்தில் கடுமையாக தாக்கினான். அதில் மாணவியின் தாடை எலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. மாணவியின் கடுமையான தாக்குதலில் நிலைகுலைந்த மாணவன் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடினான்.
பின்னர் வீடு திரும்பிய மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் மாணவியை சேர்த்த பெற்றோர், காவல்துறையிலும் புகார் அளித்தனர். மாணவி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், முகத்தில் அறுவை சிகிச்சை செய்த பின்னரே மாணவி தனது பழைய முகத்தை காணமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையினர் சம்மந்தப்பட்ட மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?