Tuesday, 24 December 2013

கற்பழிக்க முயன்றவரை விடுவித்த பஞ்சாயத்து: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி Girl attempts suicide after panchayat lets off molester

Img கற்பழிக்க முயன்றவரை விடுவித்த பஞ்சாயத்து: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி Girl attempts suicide after panchayat lets off molester

புலந்த்ஷர், டிச. 24-

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டம் சோஹி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு வயலுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வயல் உரிமையாளர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதுடன், கற்பழிக்கவும் முயன்றுள்ளார். இதற்கு அந்தப் பெண் உடன்படாததால் அவரை அடித்து உதைத்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் பஞ்சாயத்தாரிடம் முறையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபர் உயர்வகுப்பைச் சேர்ந்த பெரிய மனிதர் என்பதால், அவருக்கு சாதாரண தண்டனையாக 5 முறை அறை கொடுக்க வேண்டும் பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பினால் மனமுடைந்த இளம்பெண், தற்கொலை செய்வதற்காக நேற்று கால்வாயில் விழுந்தார். அப்போது அப்பகுதி வழியாகச் சென்றவர்கள், அந்த பெண்ணை காப்பாற்றினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger