ஆசியாவில் இனி ஆயுதப் போர் நடைபெறக்கூடாது.. அமெரிக்கா..!! சிறுபான்மை மக்கள் படுகொலைகள் முடிவுக்கு வரவேண்டும்..
மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் அமெரிக்காவின் புதிய அதிவேக ஏவுகணை கடந்த வியாழனன்று வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டது. உலகத்தின் முக்கிய இலக்குகளை ஒரு மணி நேரத்தில் தொட்டுவிடக்கூடிய மேற்கண்ட ஏவுகணை அமெரிக்க இராணுவ பிரிவான பென்ரகனின் இன்னொரு இமாலய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. அட்வாண்ஸ் கைப்பசொனிக் வெப்பன்ஸ் என்று இது அழைக்கப்படுகிறது. கடந்த வியாழனன்று அதிகாலை 13.30 மணிக்கு ஹவாயில் இருந்து ஏவப்பட்டது. சுமார் அரை மணி நேர இடைவெளியில் பசுப்பிக்சமுத்திரத்தில் உள்ள 3700 கி.மீ தூர இலக்கை இது தகர்த்துத்தள்ளியது. இந்த ஏவுகணையானது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பறக்கக் கூடியது. உலகத்தில் இன்று பாவனையில் உள்ள அத்தனை ஏவுகணைகளையும்விட இது அதிவேகமானது. இந்த ஏவுகணையின் தலைப்பகுதியில் அணு குண்டை பொருத்த முடியும். இந்தப் பரிசோதனை மூலம் தொடர்ந்தும் உலக இராணுவ பலத்தில் அமெரிக்காவே முதலிடம் என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது இவ்விதமிருக்க கடந்த வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். எதிர் காலத்தில் ஆசியா கண்டமானது அமைதி, நாடுகளோடு நாடுகள் சேர்ந்தியங்கும் ஒற்றுமைப் பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற ரக் பிரேரணை பற்றிய பேச்சுக்களை விபரமாக நடாத்தியுள்ளார். சிறீலங்காவில் நடந்தது போன்ற இன்னொரு உள்நாட்டுப் போர் இனி ஆசியாவில் இல்லை என்ற விவகாரத்தை அமெரிக்க அதிபரின் சந்திப்பு அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளது. சிறீலங்கா, இந்தியா போன்ற நாடுகள் தமது சிறுபான்மை இனங்கள் மீதான போரை நிறுத்த வேண்டிய பருவம் இதுவாகும். மறுத்தால் புதிய ஏவுகணை பதில் சொல்லும் என்ற மெல்லிய எச்சரிக்கை இதில் தேநீரில் பால் போலக் கலந்துள்ளது. மேலும் வல்லாதிக்க சக்திகளுடன் இணைந்து, அனுமதி பெற்றே வன்னிப் படுகொலைகளும் நடந்துள்ளன என்ற உண்மையையும் இந்த சந்திப்புக்கள் சொல்லாமல் சொல்லுகின்றன. இருந்தாலும் புதிய உலக ஏற்பாடு இனவாத சிங்களத்தைவிட தமிழருக்கே அதிக வாய்ப்பாக உள்ளது. சர்வதேச நிகழ்ச்சித்திட்டத்தை அறிந்து தமிழர்களும் நாடகத்தை ஆடினால் பல அரசியல் இலக்குகளை எட்டித்தொட முடியும்.
http://actressmasaala.blogspot.com
http://girls-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?