மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாவீரர் கல்லறைக்கு மலர் வைத்து இங்குவந்த மக்கள் அஞ்சலி செய்தனர். அதன்பின்னர் நோர்த்யோர்க் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பில் நடனங்கள் பேச்சுக்கள் கவிதைகள் பாடல்கள் போன்றவை இடம்பெற்றன. இந்த நிகழ்வில் மாணவர்களினதும் இளைஞர்களினதும் பங்களிப்பு அதிகமாக இருந்த்து. குறிப்பாக அங்கு பேசிய இளைஞர்களின் பேச்சுகளிலிருந்து பார்க்கும்போது, மாவீர்ர்களின் இலட்சியக் கனவான தமிழீழத்தை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தை தங்கள் தோள்களில் சுமக்க தாயராகிவிட்டதை உணர்ந்துகொள்ளக்கூடியவாறிருந்தது.
இறுதியாக மாவீர்ர் தியாகங்களை நெஞசில் நிறுத்தி அவர்கள் வழியில் தொடாந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன. அதேவேளை அனைத்து கனடிய பல்கலை கழகங்கள் , கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளுடன் இணைந்து தமிழ் இளையோர் அமைப்பு பெரும் அரங்கில் மாவீரர் நினைவெழுச்சி வார தொடக்க நாள் நிகழ்வை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





http://actressmasaala.blogspot.com
http://girls-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?