திருச்சி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பணியாற்றுபவர் ராணி. இவர் திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பரஞ்சோதி மீது, முதல் அமைச்சர் தனிப்பிரிபு மற்றும் திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து ஆகியோரிடம் புகார் கொடுத்தார்.
அதில், பரஞ்சோதியும் நானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே என் குடும்பத்திற்கு பழக்கமானவர் பரஞ்சோதி. என் கணவருடன் பிரிந்து விவகாரத்து வாங்கி, ஆழ்ந்த வருத்தத்தில் நான் இருந்தபோது, ஆறுதல் சொல்ல வந்தவர் பரஞ்சோதி. அப்படி ஆறுதல் சொன்னவர் என்னுடன் நெருங்கி பழகி, திருமணம் செய்து கொண்டார்.
என்னை இரண்டாவது திருமணம் செய்த பின்னர், அவர் கேட்கும்போதெல்லாம் பணம் மற்றும் நகைகளை கொடுத்தேன். இந்நிலையில் அவரக்கு திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு தந்தது. அப்போது என்னிடம் நான் ஜெயித்து மந்திரி ஆகிவிடுவேன். இரண்டாது மனைவி போன்ற விஷயங்ள் தலைமைக்கு பிடிக்காது, ஆகையால் நீ விலகிவிடு என்று என்னிடம் பரஞ்சோதி கூறினார். மேலும் சிலரை வைத்து மிரட்டினார் என்று புகாரில் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தை திமுக தரப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் பரப்பினார்கள். ஆனால், காவல்துறையோ, முதல் அமைச்சரோ நடவடிக்கை எடுக்காததால், ராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், காவல்துறையிடம் நேரடியாக புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு மனுவை தள்ளுபடி செய்தது.
இதற்குப் பின்னர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து வழக்கறிஞர் இமயவள்ளி துணையோடு ராணி, திருச்சி ஜெ.எம் 4 நீதிமன்றத்தில் மாஜிஸ்ரேட் புஷ்பராணியிடம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்ரேட் புஷ்பராணி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உறையூர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
http://actressmasaala.blogspot.com
http://girls-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?