பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.15 குறைந்தது: டீசல் விலை 50 காசு அதிகரிப்பு petrol price per liter rs 1.15 decrease
புதுடெல்லி, அக். 31-
சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலையில் மாற்றம் செய்துகொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விற்பனை மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட மாதந்தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தலாம் என்று கிரித்பரிக் கமிட்டி தனது ஆய்வறிக்கையை பெட்ரோலியத் துறையிடம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் அதிகரிப்பதாகவும், இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேசமயம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.15 குறைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் வரிகளைப் பொறுத்து மாறுபடும்.
இந்த விலை குறைப்பின் மூலம் இன்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 குறைந்து ரூ.74.22-க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.71.02 ஆகவும், கொல்கத்தாவில் 78.07 ஆகவும், மும்பையில் ரூ.74.22 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
டீசல் விலை சென்னையில் லிட்டருக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.56.61க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் 53.10க்கும், கொல்கத்தாவில் 57.49க்கும், மும்பையில் 60.08க்கும் விற்பனை ஆகும்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?