Thursday 29 May 2014

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ராக்கெட்டில் பறந்து சென்ற மூவர் Three of the men who flew a rocket to the International Space Station

மாஸ்கோ, மே 29-

ரஷ்யாவில் உள்ள கசகஸ்தானிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ரஷ்யா ஏவிய ராக்கெட் பறந்து சென்றது. இந்த ராக்கெட்டில் பயணம் செய்யும் மூவர் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.

சோயஸ் பூஸ்டர் என்ற அந்த ராக்கெட் வியாழன் அதிகாலை 1:57 மணிக்கு தனது பயணத்தை துவக்கியது. கும்மிருட்டாக காணப்பட்ட மத்திய ஆசிய பகுதியின் மேல் அந்த ராக்கெட் பறந்து சென்றது. நாசாவை சேர்ந்த ரீட் ஒய்ஸ்மென், ரஷியாவை சேர்ந்த மேக்ஸ் சுராயேவ் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் க்ரெஸ்ட் ஆகியோர் இந்த ராக்கெட்டில் பயணம் செய்தவர்கள் ஆவார்கள்.

இன்னும் ஆறு மணி நேரத்தில் இந்த ராக்கெட் தனது சுற்றுப்பாதை மையத்தை அடைந்து அங்கேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்து ஆய்வு செய்யும். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு ஆய்வில் ஈடுபட்டு வரும் இரு ரஷ்யர்கள் மற்றும் ஒரு அமெரிக்கருடன் இந்த ராக்கெட்டில் செல்லும் மூவரும் இணைந்துகொள்வார்கள்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டாலும் இரு நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

...

View article...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger