ஆந்திர சிறுமி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு Andhra girl molested case judgement today திருச்சி, மே.29– ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மலர்(வயது 15 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு மே மாதம் சேலத்துக்கு ஒரு கும்பல் அழைத்து வந்தது. பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிற்கு மலரை கடத்தி வந்து அடைத்து வைத்த போது அந்த கும்பலிடம் இருந்து தப்பிய மலர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி மலரை கடத்தியது விபசாரக்கும்பல் தலைவி ஆஷா (25), சக்திவேல் (38), பிரபு (31), வங்கதேசத்தை சேர்ந்த முகமது சபியுல்லா (30) மற்றும் துறையூர் அ.தி.மு.க. ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பொன்.காமராஜ் (42), தர்மா (30), காவியா (45), டிரைவர் சிவா ஆகியோர் என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து 8 பேர் மீதும் சிறுமியை கடத்தி வந்து பலாத்காரம் செய்ததாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி 2–வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது வரை இந்த வழக்கில் 38 பேரிடம் சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் முடிந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரிடம் நீதிபதி ரகுமான் சாட்சிகளின் அடிப்படையில் கடந்த 19–ந் தேதி விசாரணை நடத்தினார். அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் இன்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இதையொட்டி கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோர்ட் வளாகத்தில் இன்று காலை முதலே பரபரப்பு நிலவியது. ... |
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?