தேவர் ஜெயந்தி விழா: பரமக்குடி பகுதியில் 3,500 போலீசார் பாதுகாப்பு Devar Jayanthi festival 3500 police protection in Paramakudi area
பரமக்குடி, அக். 27–
பரமக்குடி டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வருகிற 28,29,30 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கை பாது காக்கும் வகையில் பரமக்குடி பகுதியில் 3 ஆயிரத்து 500 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புலனாய்வு துறை, குற்றப்பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் முதல் திருவரங்கம் வரையிலும், கிருஷ்ணா தியேட்டர் முதல் சத்திரக்குடி வரையிலும், கிருஷ்ணா தியேட்டர் முதல் பார்த்தி பனூர் வரையிலும், பரமக்குடி ஒட்டப்பாலம் முதல் பாண்டியர் கிராமம் வரையிலும் இரு மார்க்கங்களிலும் ஒரே நேரத்தில் போலீசார் ரோந்த வாகனங்கள் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பரமக்குடி புறநகர் பகுதிகளான காந்தி நகர், மஞ்சள்பட்டிணம், கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் வாகன சோதனைச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் மாவட்டத்தில் விழாவிற்கு வாகனங்களில் வந்து செல்பவர்கள் கண்டிப்பாக சொந்த வாகனங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். வாடகை வண்டிகளில் வந்து செல்லக்கூடாது. மேலும் பரமக்குடியில் பல்வேறு பகுதிகளும் 9 சி.சி.டி. கேமரா மூலம் போலீசார்கள் கண்காணிப்பு பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பரமக்குடி மற்றும் பார்த்திபனூரில் 28–ம்தேதி மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்களின் கொடி அணிவகுப்பு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 16 மோப்பநாய்கள் மாவட்ட எஸ்.பி.மயில்வாகணன் உத்தரவின்பேரில் பரமக்குடி டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையில் அபிராமம், பார்த்திபனூர் பகுதிகளில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?