காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு heavy rain Chennai lakes water flow increase water
சென்னை, நவ. 4–
வங்க கடலில் இலங்கை அருகே உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து கன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் இன்றும் மழை பெய்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்றிரவும், இன்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 7 மி.மீட்டர் மழையும், சோழவரம் ஏரியில் 8 மி.மீட்டர், செம்பரம்பாக்கம் ஏரியில் 12 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
இதனால் குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரிக்கு மழை நீருடன் சேர்ந்து கிருஷ்ணா கால்வாயில் 115 கனஅடி தண்ணீர் வருகிறது. புழல் ஏரிக்கு 156 கனஅடி தண்ணீரும், சோழவரம் ஏரிக்கு 58 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 154 கனஅடியும் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.
மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?