உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட இந்தியா தகுதி India qualify for Hockey World Cup
புதுடெல்லி, நவ. 4-
இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ள அணிகள் பட்டியலில் இணைந்துள்ளது.
நெதர்லாந்தில் அடுத்த ஆண்டு உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உலக ஹாக்கி லீக் தொடருக்கான அரையிறுதியில் இந்திய அணி 6-வது இடம் பிடித்தது. அதேசமயம் ஆசிய கோப்பை போட்டியில் தோல்வியடைந்ததால் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற முடியவில்லை.
இந்நிலையில், நியூசிலாந்தில் நடைபெற்ற ஓசியானியா கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கோப்பையை கைப்பற்றின.
இந்த அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தன. இதனால் இந்திய அணி உலகக் கோப்பையில் பங்கேற்பது உறுதியானது. இதனை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?