Tuesday, 29 October 2013

மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம் Hide lotus blooming in the pool in Madhyapradesh Congress letter to Election commission

மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம் Hide lotus blooming in the pool in Madhyapradesh Congress letter to Election commission

போபால், அக்.29–

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25–ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வருகிற 1–ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கட்சி மொத்தம் உள்ள 230 இடங்களில் 150 முதல் 160 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பெரிதும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மகா கவுசல். மால்வா, பந்தல் கண்ட் ஆகிய மண்டலங்களில் 40–க்கும் மேற்பட்ட குளங்களில் தாமரை மலர் பூத்துள்ளது. இந்த குளங்களில் தாமரை பயிரிடப்படுகிறது.

இந்த 40 குளங்களில் இருந்து தான் மத்தியபிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு தாமரை மலர்கள் அனுப்பப்படுகின்றன.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னம் தாமரை என்பதால் இந்த குளங்களில் பூத்துக்குலுங்கும் தாமரை பூக்கள் காங்கிரசாரிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த தாமரை பூக்கள் தங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தும் வகையில் மாறி விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

இதையடுத்து மத்திய பிரதேச மாநில காங்கிரசார் நேற்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்துள்ள தாமரைகளை திரை போட்டு மறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் தேர்தல் நடந்த போது மாயாவதியின் பகுஜன் சமாஜகட்சியின் சின்னமான யானை சிற்பங்கள் எல்லாம் துணி போட்டு மூடப்பட்டன. அது போல தாமரை பூக்களையும் மூட வேண்டும் என்கிறார்கள்.

இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரசாரின் கோரிக்கை கேலிக்கூத்தாக உள்ளது. காங்கிரசின் சின்னம் கை என்பதால் நாட்டில் உள்ள எல்லாரது கைகளையும் மறைக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் காங்கிரசாரின் கோரிக்கை அபத்தமாக உள்ளது என்று பா.ஜ.க.வினர் கூறியுள்ளனர்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger