நடிகை கஜோல் வீட்டில் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு: வேலைக்காரி வேலைக்காரன் கைது maid and servant arrester for stealing rs. 5 lakh jewels from kajol
மும்பை, அக். 30-
பாசிகர் இந்தி படத்தின் மூலம் பிரபல பாலிவுட் கதாநாயகியாக 1992-ல் அறிமுகமாகியவர் நடிகை கஜோல்.
தில்வாலே துலன்யே லே ஜாயங்கே மற்றும் குச் குச் ஹோத்தா ஹை படங்களின் மூலம் புகழ் ஏணியின் உச்சியை தொட்டு 2011-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்ற கஜோல், 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சுமார் 40 படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்க்னை 5 ஆண்டுகளாக காதலித்து 1994-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.
மும்பையின் புறநகர் பகுதியான ஜுகு-வில் உள்ள ஆடம்பர வீட்டில் இத்தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 22-ம் தேதி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து கொண்ட கஜோல் தனது நகை பெட்டியில் இருந்து 17 வளையல்கள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இது வீட்டின் உள்ளே சுதந்திரமாக நடமாடும் யாரோ செய்த வேலையாகதான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவர் இது தொடர்பாக ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது வீட்டில் வேலை செய்யும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் காயத்ரி (22) சந்தோஷ் பாண்டே ஆகிய இருவரை கைது செய்தனர்.
அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் விசாரணை காவலின்கீழ் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
திருடப்பட்ட 17 வளையல்களில் மதிப்பு ரூ. 5 லட்சத்துக்கும் அதிகம் என போலீசார் தெரிவித்தனர்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?