ஆந்திராவில் பலத்த மழை: 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது heavy rain andhra 4200 village flooded afloat
ஐதராபாத், அக். 28–
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
மழை வெள்ளத்தால் ஆந்திராவில் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விசாகப்பட்டினம், விஜயநகரம், மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், மெடக், கரிம்நகர், கம்மம், பிரகாசம் உள்பட 14 மாவட்டங்களில் விவசாய பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழிந்தது.
மேற்கு கோதாவரியில் 1150 வீடுகள் இடிந்து தரை மட்டமானது. 2½ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மூழ்கியது. விசாகப்பட்டினத்தில் 20 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு பயிர்கள் அழிந்தது.
இதே போல், மெடக், கரிம்நகர், கம்மம் மாவட்டத்தில் நெல், பருத்தி, மிளகாய், மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கி அழுகியது.
மழையால் மாநிலத்தில் ரூ.1727 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக வருவாய்துறை மந்திரி ரகுவீராரெட்டி கூறினார். நேற்று அவர் வெள்ளம் பாதித்த நல்கொண்டா மாவட்டத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது:–
மாநிலத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 521 மண்டலத்தில் 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 22 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளது. 42 பேர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணப் பணிக்காக ரூ.1600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயநகரம் மற்றும் விஜயவாடா பகுதியில் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் கோரப்பள்ளி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்பட 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மற்ற ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. மாநிலம் முழுக்க 85 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் ஒடிசாவில் பெய்து வரும் மழையால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2½ லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?