ஆசிட் வீசி கொலை: வினோதினி வழக்கில் 20–
ந்தேதி தீர்ப்பு நீதிபதி அறிவிப்பு acid attack
vinodhini case 20th judgment judge announced
காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர்
வினோதினி. இவர் சென்னையில் சாப்ட்வேர்
நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த
ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது காரைக்காலுக்கு வந்துவிட்டு நவம்பர்
14–ந்தேதி சென்னைக்கு புறப்பட்டார். அவர்
பஸ் நிலையத்துக்கு செல்ல
வீட்டை விட்டு வெளியே வந்தபோது காரைக்காலை சேர்ந்த
சுரேஷ் என்ற வாலிபர் அவர்
மீது ஆசிட்டை விசினார்.
இதில் வினோதினி முகம் முழுவதும்
வெந்தது. அவர் சென்னை கீழ்ப்பாக்கம்
ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது இரு கண்களும் பார்வையிழந்தது.
தொடர்ந்து 1 மாதத்துக்கு மேலாக
சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென அவர்
உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சுரேஷ்
கைது செய்யப்பட்டார். வினோதினி காதலிக்க
மறுத்ததால் அவர் மீது ஆசிட் வீசியதாக அவர்
கூறினார். இந்த
வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட
கோர்ட்டில் நடந்து வந்தது. இன்றுடன்
வழக்கு விசாரணை முழுவதும் முடிந்தது.
அதையடுத்து வருகிற 20–
ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும்
என்று நீதிபதி அறிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?