Monday, 12 August 2013

இந்தியா தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதல்: ஷிகார் தவான் இரட்டைச் சதம் Shikhar Dhawan slams double ton for India A against South Africa A

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்
ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கிடையிலான
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென்
ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இன்று இந்தியா -தென் ஆப்பிரிக்கா ஏ
அணிகளுக்கிடையிலான
போட்டி பிரிட்டோரியாவில்
நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய
அணியின் துவக்க வீரர்களாக ஷிகார் தவான்,
முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர்.
துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய
வீரர்கள் 14 ஓவர்களில் 100 ரன்னைத்
தொட்டனர்.
37 பந்துகளில் 40 ரன்கள் குவித்த
முரளி விஜய், ஹென்ட்ரிக்ஸ் பந்தில்
ஆட்டமிழந்தார். அதன்பின்னர் புஜாராவும்,
ஷிகார் தவானும் தென் ஆப்பிரிக்க
பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 86
பந்துகளில் சதம் கடந்த தவான்,
அதே வேகத்தில் இரட்டைச் சதத்தையும்
கடந்தார். 132 பந்துகளில் 24 பவுண்டரிகள், 4
சிக்சர்களுடன் இந்த சாதனையை அவர்
எட்டினார்.
இதன்மூலம் சர்வதேச அளவில் ஏ அணியில்
அதிகபட்ச ரன் குவித்த வீரர் என்ற
பெருமையை ஷிகார் தவான் பெற்றார்.
இதற்கு முன்பு 2008ம் ஆண்டு லண்டனில்
நடந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் உபுல்
தரங்கா 173 ரன்கள்
அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
அதனை இப்போது தவான் முறியடித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger