ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளை காதலனுடன் அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Rajasthan judge daughter freed by Supreme Court to marry
சித்தார்த் முகர்ஜி என்ற இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது காதலி சுப்ரியா ரத்தோரை (30), உயர் நீதிமன்ற நீதிபதியான அவரது தந்தை ஆர்.எஸ். ரத்தோர் சட்டத்திற்கு விரோதமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் சிறை வைத்துள்ளார் என்றும், அவரை மீட்டு தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.மேலும், காதலர்களான நாங்கள் இருவேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், நீதிபதி ரத்தோர் அதை விரும்பவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார். வீட்டுச்சிறையில் இருந்த சுப்ரியா ரத்தோரும், இதுகுறித்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கும் உதவி கேட்டு மின்னஞ்சல் அனுப்பியும் இருந்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சுப்ரியா ரத்தோரை நீதிமன்றத்தில் இன்று போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சுப்ரியா ரத்தோர், எனது பெற்றோருக்கு எதிராக எந்த கோபமும் இல்லை. ஆனால், எனது காதலர் சித்தார்த் முகர்ஜியுடன் செல்ல விரும்புகிறேன். அவரையே நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் நீதிபதிகளிடம் கூறினார்.
இதையடுத்து சுப்ரியா ரத்தோரை தனது காதலர் சித்தார்த் முகர்ஜியுடன் அனுப்பி வைக்குமாறு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் கோர்ட்டில் இருந்து காதலனுடன் சுப்ரியா ரத்தோர் புறப்பட்டுச் சென்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?