பொதுவாக திரைப்படம் என்றாலே ஒரு கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்ற கதாபாத்திரங்கள் தான் முக்கியம்.
ஆனால் தற்போது உருவாகி ஒரு புதிய படத்திற்கு கதாநாயகனே கிடையாது. களவாணி திரைப்படத்தை தயாரித்த நசீர் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்தப்படத்திற்கு வதம் என்று பெயரிட்டுள்ளனர்.
சின்னத்திரையில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து பெரிய திரைக்கு வருகிறார் புதுமுகம் மதிவாணன்.
படத்தின் கதை முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி உருவாவதால் இதில் கதாநாயகனே கிடையாது.
மதம் திரைப்படத்தின் கதாநாயகியாக பூனம் கவுர் நடிக்கிறார். இவருடன் பாய்ஸ் மணிகண்டன், டைரக்டர் வெங்கடேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த தேவா இசையமைத்துள்ளார்.
கொடைக்கானல் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் பெப்ரவரி மாதம் திரைக்கு வரும் என கொலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?