இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், யாழ்ப்பாண சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் மீனவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக, உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை சென்று சிறையில் இருக்கும் மீனவர்களை பார்க்க உதவி செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படை பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்றும், இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?