தமிழில் சிறுத்தை, சுறா என பல படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா.
தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:
சினிமா உலகில் உங்களுக்கு போட்டி இருக்கிறதா?
சினிமாவில் தினமும் புதுசு புதுசாக நடிகர், நடிகைகள் வருகிறார்கள். எல்லாதுறையிலும் இருப்பது போல் இங்கும் போட்டி உள்ளது. இதில் முன்னால் ஓடுபவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். சினிமாவில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சோர்ந்து போகவும் இல்லை.
இப்போதைக்கு நீங்கள்தான் நம்பர் ஒன் நடிகையாமே?
நான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறேனோ என்றும் தெரியவில்லை. ஆனாலும் என் கைவசம் நிறைய படங்கள் உள்ளது.
சினிமாவில் தோற்றுப் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள்..?
என் படங்கள் தோற்றால் விமான பணிப் பெண் வேலைக்கு போய் விடவேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால் ஹேப்பி டேஸ் படம் ஹிட்டாகி என்னை பிரபலபடுத்தியது. நிறைய படவாய்ப்புகள் வந்தன. எனக்கு அழகு இருப்பது வரை சினிமாவில் நிலைத்து இருப்பேன்.
தற்போது கைவசம் எத்தனை படங்கள் உள்ளது?
தெலுங்கில் 5 படங்கள் கைவசம் உள்ளது. எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டு இருந்தால் 20 படங்கள் என்னிடம் இருந்து இருக்கும். ஆனால் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிப்பதால் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
வரும் புத்தாண்டு தங்களுக்கு எப்படி இருக்கும்?
2012-ல் என்னை யாரும் அசைக்க முடியாது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?