தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகியாக சிறகடித்த த்ரிஷா தற்போது விஷால் ஜோடியாக, திரு இயக்கத்தில் 'சமரன்' படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குறைந்து போனதற்கு என்ன காரணம் என்ற மிக முக்கியாமான டிஸ்கஷனை நடத்தியிருகிறது பிரபல ஆங்கில நாளிதழ். அதில் த்ரிஷாவுக்கு வயதாகி விட்டதால்தான் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சொல்லியிருக்கிறது. ஏன் அந்த ஆங்கில நாளிதழுக்கு த்ரிஷா மீது இத்தனை கொலைவெறி என்று த்ரிஷா வட்டாரத்தில் கேட்டால், அவர்கள் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு நடத்திவரும் ஆங்கில சினிமா இணையத்துக்கு ஷாட் செய்ய புத்தாண்டுக்கு இரண்டுநாள் முன்பு அலுவலகத்துக்கு அழைத்தார்களாம். ஆனால் த்ரிஷா பாங்காக்கில் இருந்து ஷாட் செய்யலாம் என்றாராம். இதில் கடுப்பாகிய நாளிதழ், த்ரிஷா தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக இருப்பதால், தமிழில் அவருக்கு வாய்ப்புக் குறைந்த காரணத்தை தேடிப்பிடித்து எழுதி கோபத்தை தணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் த்ரிஷாவிடம் இதுபற்றிக் கேட்டால், "எனக்கு வயதாகி விட்டது என்பது உண்மைதான். இப்போது எனக்கு 29 வயது. சினிமா ஃபீல்டில் இதெல்லாம் ஒரு வயதா? நாற்பது வயதைத் தொடப்போகும் ஐஸ்வர்யா ராய் இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகைகள் தங்கள் உடலமைப்பை ஆரோக்கியமாக, அழகாக வைத்துக் கொண்டால் போதும் ஃபிட்னஸ் இருக்கும் வரை யாரும் நமது இடத்தை பிடுங்க முடியாது. எனக்கு அந்த பிட்னஸ் அப்படியே இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் வரை அதைத் தக்க வைத்துக்கொள்வேன். அதுவரை நடித்துக்கொண்டே இருப்பேன். எனக்கு வாய்ப்பில்லை என்று யார் சொன்னது? தெலுங்கில் நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறேன். தமிழ் மொழியில் நடித்தால் மட்டும்தான் பிஸியான நடிகையா?" என்று கேட்கிறார் பாங்காக்கில் இருந்து. அங்குதான் தற்போது 'சமரன்' படப்பிடிப்பு நடந்து வருகிறது! அதுசரி… ஐஸ்கூடல்லாம் கம்பேர் பண்ணிக்கிறீங்களே…. ஒங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா….?
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?