மணிரத்னம் இயக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகள் லட்சுமி மன்ச் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படம் 'பூக்கடை'. இதில் ஹீரோவாக கார்த்திக் மகன் கவுதம் நடிக்கிறார். ஹீரோயின் லட்சுமி மன்ச். இவர் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள். இதுபற்றி லட்சுமி மன்ச் கூறியதாவது:
மணிரத்னம் 2 மாதம் முன்பே என்னிடம் படத்தின் ஸ்கிரிப்ட் கொடுத்தார். படித்தேன். பிடித்திருந்தது. தற்போது தமிழ், தெலுங்கில் என் சகோதரர் மனோஜ் மன்ச் நடிக்கும் படத்தை தயாரிக்கிறேன். அதன் பூஜைக்கு இம்மாதம் 15-ம் தேதி சென்னை வந்தேன். அப்போதுதான் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
இது கிராமத்து பின்னணியிலான கதை. பக்கா தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். சுத்த தமிழ் பேசி நடிக்க வேண்டும் என்பதால் இது எனக்கு சவாலான வேடம். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது. மணிரத்னம் இயக்கிய படம் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். அவர் படத்தில் நடிப்பது அதிர்ஷ்டம். ஸ்பீல்பெர்க், மணிரத்னம் படத்தில் நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்தால், மணிரத்னம் படத்தில்தான் நடிப்பேன்.
இவ்வாறு லட்சுமி மன்ச் கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?