Sunday, 14 August 2011

டெரர்கும்மியின் புதிர் போட்டி அறிமுகம்....!!!




முதல் டிஸ்கி : மைனஸ் ஓட்டு போடுற புண்ணியவான் இதை படிக்க வேண்டாம்.


டிஸ்கி : இந்த பதிவை உணவு உலகம், ஆபிசர் சங்கரலிங்கம் அவர்களின் தளத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன், ஏன்னா, பதிவுலகின் அடுத்த கட்டத்தை நோக்கி டெரர்கும்மி பட்டையை கிளப்ப போவதை, சந்தோசமாக வாழ்த்தி அறிமுக படுத்திய ஆபீசருக்கு நன்றி சொல்லி,டெரர்குரூப்புக்கு வாழ்த்தும் சொல்ல கடமை பட்டுள்ளேன்...!!!



வாங்க மக்கா எல்லாரும் போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்து வாழ்த்துவோம்.....

-------------------------------------------

பதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்.


 பதிவுலகம் என்றாலே பக்கம் பக்கமாய் எழுதுவது, நேரம் பத்தலேன்னு சொல்லிக்கிட்டு, உள்குத்து பதிலொ(வொ)ன்றைப் போட்டு, பல தர்க்கங்கள் உருவாக்கிவிடுவது என்பதொன்றே  எழுதாத சட்டம் என்று இயற்றி வாழ்பவர்கள் மத்தியில், எழுத்துலக பிரபலங்கள்   பதினாறு பேர்         இணைந்து நடத்தும், டெரர்கும்மி என்ற வலைத்தளத்தில் ஒரு வித்யாசமான அறிவிப்பைப் பார்த்தேன்.
எதிர்வரும் 17.08.2011ல் புதிர் போட்டி ஒன்றை அவர்கள் துவக்க உள்ளனர்.இந்தூர், ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் அந்த புதிர் போட்டியை  உருவாக்கியுள்ளனர்.

என்ன புதிர் போட்டி இது?

  • 1.நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

    2.ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்


    3.விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 


    4.விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்


    5.இப்படி மொத்தம் 25 லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....


    6. அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் "HALL OF FAME"லும் "டெரர் கும்மி.காம்"மிலும் வெளியிடப்படும்.

    7.போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்


    8.புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.
             கலந்து கொள்ள நினைப்பவர்கள், விளையாடிப் பார்க்க, மாதிரி போட்டிகளும் தளத்தில் உள்ளன.

    மன்னா, பரிசுத்தொகை எவ்வளவு?

    முதல் பரிசு: 5000 ரூபாய்
    இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
    மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
    இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.
     மேலதிக விவரங்களுக்கு: 
    Hunt for Hint புதிர் போட்டி அறிவிப்பு - பரிசு 10,000 ரூபாய்

                            போட்டிகள் நிறைந்த பதிவுலகிலே, புதிர் போட்டியொன்றை அறிவித்திருக்கும் டெரர்கும்மி நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த இந்த முயற்சி, சிகரங்களை நோக்கி உங்களை அழைத்துச்செல்லும். 

    டிஸ்கி : ஜெயிக்கப்போவது யாரு....??? 
    எலேய் "சிரிப்புபோலீஸ்" எங்களை ஏமாத்தி சோறுன்னு நினச்சி ஒத்தைக்கு தின்னுபுடாதலெய், நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்லி மரியாதையா மொத்த பணத்தையும் அண்ணன் அக்கவுண்டுக்கு அனுப்பிரு, இல்லன்னா மொத்த குரூப்புக்கும் அருவா பார்சல் அனுப்பிருவேன் சாக்குரதை......[[ஹி ஹி]]


http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger