மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது தவறு: மணிசங்கர் அய்யர் Prime Minister Manmohan Singh chosen mistake Mani Shankar Aiyar
புதுடெல்லி, டிச.10-
நான்கு மாநில சட்டப்பேரவை முடிவுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கட்சியில் மறு சீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று கூறி வருகின்றனர்.
இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் பேட்டியொன்றில்,
பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக தாக்கியுள்ளார். 2009-ம் ஆண்டு பிரதமராக மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதே தவறு. அதை இப்போதைய தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறது.
பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்? என பலமுறை கேள்வியெழுப்பியுள்ளேன். ஆனால் தனது கருத்தை தங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாரும் கவனிக்கவில்லை.
தற்போது கட்சியை மறுசீரமைப்பது அவசியம். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தன்னை புதிதாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அதற்காக கட்சி தலைமையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?