அஜீத்தின் ஆரம்பம் படத்தின் ட்ரெய்லரை செப்டம்பர் 19 வெளியிடுகின்றனர்.
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
ஆரம்பம் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டு திரையரங்குகள் புக்கிங் நடந்து வருகிறது. கோயம்புத்தூரில் 15 திரையரங்குகளில் ஆரம்பம் வெளியாகிறது. இதுவரை எந்திரன் மட்டுமே இங்கு 15 திரையரங்குகளில் வெளியானது. இப்போது ஆரம்பம்.
படத்தின் ஆடியோ செப்டம்பர் 19 கடைகளில் கிடைக்கும். ஆடியோ வெளியீட்டு விழா என்று எதுவுமில்லாமல் நேராக சிடி-கள் கடைகளுக்கு வந்துவிடும். ஆரம்பம் படத்தின் டீஸர் மட்டுமே வெளியிட்டிருந்தார்கள். ஆடியோ வெளியாகும் அதேநாள் ஆன்லைனில் ட்ரெய்லரையும் வெளியிடுகின்றனர். செப்டம்பர் 18ஆம் தேதி நள்ளிரவு இந்த ட்ரெய்லர் வெளியாகும். விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் ஆரம்பத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆர்யா, நயன்தாரா, தாப்ஸி, ராணா நடித்துள்ளனர்.
படத்தின் வெளிநாட்டு உரிமை, கேரளா, கர்நாடகா உரிமைகள் ஏற்கனவே பொpய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?