Tuesday, 17 September 2013

பிரேக் எடுத்து உடம்பை ஃபிட் ஆக்கிய சீரியல் நடிகை! Body fit serial actress

இரண்டு வருடம் பிரேக் எடுத்து உடம்பை ஃபிட் ஆக்கிய சீரியல் நடிகை!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மெகா சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நீலிமா.

செல்லமே, தென்றல் தொடர்களில் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த போது பாதியிலேயே காணாமல் போனார். இப்போது மீண்டும் திரும்ப வந்திருக்கிறார்… சீரியல் நாயகியாக அல்ல சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.

சீரியல்களில் அழுது வடியும் கதாபாத்திரத்திலும், வில்லத்தனம் செய்யும் வில்லியாகவும் நடித்து போர் அடித்துப் போன நீலிமா அல்ட்ரா மாடர்ன் லுக்கில் நாயகியாகியுள்ளார். – See more at:

நீலிமா குழந்தை நட்சத்திரமா நடிச்ச முதல் படம் 'தேவர் மகன்'. அப்புறம் 'பாண்டவர் பூமி', 'விரும்புகிறேன்', 'தம்', 'பிரியசகி', 'சந்தோஷ் சுப்ரமணியம்', திமிரு, 'நான் மகான் அல்ல'னு பல படங்கள்ல நடித்திருக்கிறார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் முடிந்து குழந்தை என செட்டில் ஆனவர் காஜல் அகர்வால் அட்வைஸ் படியே மீண்டும் ஹீரோயினாக நடிக்க வந்திருக்கிறாராம்.

கணவர், தோழிகளின் ஆலோசனைப் படி இரண்டு வருடம் பிரேக் எடுத்து உடம்பை ஃபிட் ஆக்கியுள்ளார். தோற்றம், பாடி லாங்குவேஜ், கூந்தல் அலங்காரம், ஸ்டைல்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து மெருகேற்றியுள்ளாராம்.

நீலிமாவிற்கு சிம்ரன் மாதிரி நடிக்க ஆசையாம். இதற்காக சிம்ரன் மாதிரியே ஸ்லிம் பியூட்டி ஆகியுள்ளார். டயட்டுடன் எப்பவும் ஜாலியா சிரிச்சுட்டு மனசை சந்தோஷமா வைத்துக் கொள்வதுதான் அழகு என்கிறார் நீலிமா.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger