ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு: ஜெகன் மோகன் parliamentary election that the partys support for a united Andhra Pradesh Jagan Mohan
ஐதராபாத், அக். 26-
தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஆந்திராவில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:-
இது டெல்லியின் அகந்தைக்கும், தெலுங்கு மக்களின் சுய மரியாதைக்கும் இடையிலான போராட்டம். ஆந்திர மாநிலத்தை பிரிக்கும் முயற்சியை தடுப்பதற்கு வரும் மக்களவைத் தேர்தலில் நாம் 30 தொகுதிகளையும் மக்கள் நமக்கு வழங்க வேண்டும். ஒன்றுபட்ட ஆந்திராவை முன்னிறுத்தும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறேன்.
நாம் 30 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதன்பின்னர் யாரால் ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க முடியும் என்பதை பார்ப்போம். 30 தொகுதிகளில் வென்றால், ஒன்றுபட்ட ஆந்திராவை உருவாக்கக்கூடிய ஒரு பிரதமரை நம்மால் உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?