Thursday, 26 April 2012

இராசதுரைக்கு - கறுப்புக்கொடி காட்டினார் (புலி கோமாளி) சிவாஜிலிங்கம்! தந்தை செல்வா முன்நிலையில் சண்டையிட்ட (புலி)கூட்டமைப்பு தலைவர்கள்!!



Thursday, April, 26, 2012
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=NiF_BZJbHls

இலங்கை::இராசதுரைக்கு - கறுப்புக்கொடி காட்டினார் (புலி கோமாளி) சிவாஜிலிங்கம்! தந்� ��ை செல்வா முன்நிலையில் சண்டையிட்ட (புலி)கூட்டமைப்பு தலைவர்கள்!!

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். யாழிலுள்ள தந்� ��ை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, "தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டு� ��்" என போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நினைவுக் கூட்டத்திலிருந்து வெளியேறிய முன்னாள் (புலி)கூட்டமைப்பு சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

முன்னாள் அமைச்சராக இருந்த இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு அரசில் இணைந்து அமைச்சரானவர். பி ன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவளித்து தமிழ் இளைஞர்களை (புலிகளை) சிறையில் தள்ளியவர். இந்த புனிதமான மண்ணில் இவரை கால் வைக்க விடமாட்டேன்" என்றார்.

எவ்வாறாயினும், சற்று நேரத்திற்கு பின்னர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் செல்லையா இராஜதுரை உரையாற்றும் போது,

தந்தை செல்வா ஒரு அரசியல் பாடப்புத்தகம், அவர் தமிழ் மக்கள் ப� �ரிந்து வாழ்வதை விரும்பாத ஒருவர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்துவிட்டு காலத்தால் அழிக்க முடியாத ஒருவர்" என்றார்.

இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சத்தியதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோலமேன் சிறில், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார், தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்ப ினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


http://tamil-cininews.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger