இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கனடாவின் சார்பில் பேசிய கனடிய வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.சபை நம்பத்தகுந்த சாட்சியங்களுள்ள போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அசண்டையீனமாக இருந்து விடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
தனது உரையின் முக்கிய அம்சமாக பலஸ்தீனியத்தின் ஆட்சியதிகார பீடம் தங்களை தனிநாடாக அங்கீகரிக்கக் கோருவதை கனடா எதிர்க்கும் என்பதை ஐ.நா.அவைக்கு தெளிவான செய்தியாகத் தெரிவித்த அவர்,
அதன் பின்னர், சிரியா, பர்மா, ஈரான் ஆகியவற்றின் வன்முறைகள், ஜனநாயக விரோதப் போக்குகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக இருக்கக்கூடாது என்பதைக் குறிப்பிட்டு அதேபோன்று தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக நம்பப்படும் சிறீலங்காவின் போர்க் குற்றங்கள் குறித்தும் ஐ.நா. அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை கனடியப் பாராளுமன்ற வளாகத்தில் இந்த வாரம் புதன்கிழமை மாலை சிறீலங்காவின் கொலைக்களம் என்ற விவரண நாடாவை மனிதவுரிமை கண்காணிப்பு மையம் திரையிடவுள்ளது.
இதனை ஏற்பாடு செய்துள்ள கொன்சவேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் தான் கனடிய மனிதவுரிமை மையம் என்ற தமிழ் அமைப்புடன் இணைந்து செயலாற்றப் போவதாக நேற்றைய தினச் செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.
இந்த ஒளியிழையைப் பார்வையிட தங்களுடைய தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ஈழத்தமிழர்கள் அழைப்பு விடுத்து இதன் தாற்பரியத்தை உணர்த்த வேண்டுமென கனடிய தமிழ்க் காங்கிரஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.
http://actressmasaala.blogspot.com
http://actressmasaala.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?