சமீப காலமாக முதல்படத்திலேயே முத்திரை பதிக்கும் டைரக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்த சரவணன், தனது முதல்படமான "எங்கேயும் எப்போதும்" படம் மூலம் அனைவரின் பாராட்டை பெற்றுவிட்டார். கடந்தவாரம் வெளிவந்த இந்தபடம் அனைத்து திரையரங்குகளிலும் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. முதல்படமே சூப்பர் ஹிட்டாகியுள்ளதால், கோலிவுட்டில் சரவணனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பலரும், சரவணன் இயக்கத்தில் ஒரு படம் பண்ண ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கூட டைரக்டர் லிங்குசாமி, சரவணனை சந்தித்து வெகுவாக பாராட்டி, தங்களுடைய அடுத்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார். சரவணனும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். இந்நிலையில், லிங்குசாமியின் ஆலோசனைபடி சரவணன், நடிகர் ஆர்யாவிடம் அணுகி தன்னுடைய அடுத்த படத்தின் கதை பற்றி கூறியிருக்கிறார். ஆர்யாவுக்கும் கதைபிடித்து போய் உள்ளதாக தெரிகிறது. அநேகமாக சரவணனின் அடுத்த படம், லிங்குசாமியின் தயாரிப்பில், ஆர்யா ஹீரோவாக நடிக்க கூடும் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?