இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக நம்பகத்தன்மையுடன் கூடிய தேசிய பொறுப்புடைமை நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்தபோதே பான் கீ மூன் இந்த விடயத்தை வலியுறுத்தியதாக ஐக்கிய நாடுகளின் செய்தி சேவை அறிவித்துள்ளது.
மோதல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து கவனம் செலுத்தி அரசியல் தீர்வொன்றை காணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஐ.நா. செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியதாக அவரது பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?