காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் பிரதமர் மன்மோகன் சிங் கெட்டுவிட்டார். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு பாரமாக மாறியுள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று அகமதாபாத் அருகே உள்ள வஸ்த்ராலில் மாபெரும் பேரணி நடத்தினார். பேரணி முடிவில் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றபோது அவர் நல்ல மனிதராக இருந்தார். அவருக்கு எதிராக நாம் எதுவுமே கூறியதில்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் தான் கெட்டுவிட்டார். கடந்த ஆண்டு முதல்வர்கள் மாநாடு நடந்தபோது 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. அதில் ஒரு குழுவுக்கு நான் தலைமை வகித்தேன்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்து என் குழு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அறிக்கை சமர்பி்த்தது. எங்கள் அறிக்கைக்காக பாராட்டிய பிரதமர் அதை திறந்து கூட பார்க்கவில்லை.
அந்த அறிக்கை தொடர்பாக ஏதாவது செய்யுமாறு பிரதமருக்கு நினைவூட்டுங்கள் என்று நான் மற்ற தலைவர்களை கேட்டுக் கொண்டேன் என்றார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சில அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் மோதிக்கொள்ள பிரதமர் எப்படி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றியும் மோடி அந்த கூட்டத்தில் பேசினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?