தங்கத்தின் விலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுக்குள்ளானது.
கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ 688 குறைந்த நிலையில், இன்று மீண்டு ரூ 656 குறைந்து நகைப் பிரியர்கள் மனதில் தற்காலிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.22 ஆயிரத்தை நெருங்கியது. இந்த நிலையில், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து சமீப காலமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்து 920-க்கு விற்றது.
அதை தொடர்ந்து மறுநாள் (சனிக்கிழமை) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.688 குறைந்து ரூ.20 ஆயிரத்து 232 ஆக இருந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க மாற்று சந்தைக்கு விடுமுறையாகும். இந்த நிலையில் இன்று சவரனுக்கு மேலும் ரூ.656 குறைந்தது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 576 ஆக விற்பனையாகிறது.
ஒரு கிராம் ரூ.2447 ஆக உள்ளது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1344 குறைந்துள்ளது. இது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த நிலை தொடரும் என்றும், விரைவில் ரூ 18000 ஆக சவரன் விலை குறையும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளியும் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 995 ஆகவும், ஒரு கிராம் ரூ.53.50 ஆகவும் உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?