தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்த சோனா, அந்தப் பிரச்சினையில் தன்னை சமரசம் செய்ய வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையை வீடியோவில் பதிவு செய்து போலீசில் கொடுத்துள்ளார்.
அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்தின் வெற்றிக்காக தி.நகரில் உள்ள நடிகர் வைபவின் வீட்டில் மது விருந்து நடை பெற்றது. இதில் நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் பிரேம்ஜி, வைபவ், பின்னணி பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த மது விருந்தின் போது, எஸ்.பி.பி. சரண், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் நடிகை சோனா பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
இது தொடர்பாக பாண்டிபஜார் போலீசில் புகார் அளித்த அவர், 2 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் முறையிட்டார். எஸ்.பி.பி. சரண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கான வீடியோ ஆதாரத்தையும் கமிஷனர் திரிபாதியிடம் சோனா ஒப்படைத்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் நடிகை சோனா, பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்றார். எஸ்.பி.பி. சரணுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை இன்ஸ் பெக்டர் அழகுவிடம் அவர் ஒப்படைத்தார். வீடியோ ஆதாரம் தொடர்பாக சுமார் 30 நிமிடத்துக்குமேல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எங்கு வைத்து அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரத்தை சோனா போலீசாரிடம் விளக்கி கூறினார்.
சோனா கொடுத்த வீடியோ ஆதாரத்தை போலீசார் போட்டு பார்த்தனர். அதில் சோனாவுடன் சமாதான பேச்சு வார்த்தை நடப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
இந்த வீடியோ ஆதாரத்தால்இயக்குநர் வெங்கட் பிரபு சோனாவிடம், சரணை மன்னித்து சமரசடமாக போகும்படி கூறுவது போன்ற காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சு வார்த்தை நடைபெற்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் கேமராவை பொறுத்தி இந்த காட்சிகளை சோனா பதிவு செய்துள்ளார். இதனை அவர் போலீசிலும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து எஸ்.பி.பி. சரண், வெங்கட் பிரபு ஆகியோரிடமும் விசாரிக்க போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?