காமத்தை மாயை என்கிறோம். ஏன்? காமத்தில் அன்பின் வேர்கள் ஓடாமல் போனால் காமம் வெறும் மாயை ஆகிவிடுகிறது. மத்திய பிரேதசத்தின் "சாதர்பூர்"மாவட்டத்தில் காட்டுபகுதியில் கட்டப்பட்டிருக்கும் "கஜூரோகா" கோவில்கள் "காமம் வெறும் மாயை"என்று சொல்கிறது. "கஜூரோகா" கோவில்கள்… கஜீர் என்றால் "பேரீச்சை",கஜீரோகா என்றால் "பேரீச்சை மரங்கள்" அதிகம் உள்ள பகுதி என்று பொருள். இன்றும் நாம்,பால் உணர்வை தூண்ட பேரீச்சம்பழம் சாப்பிடு என்கிறோம்.
இங்கு ஹேமாவதி என்ற பெண்ணை கந்தர்வ மணம் புரிந்தான் சந்திரன். இவர்களுக்கு சந்திரவர்மன் என்ற மகன் பிறந்தான். இதை விரும்பாத ஹேமாவதியின் சமூகம் அவளை ஊர் விலக்கு செய்து காட்டுக்குள் விரட்டியது. காட்டுக்குள் துணிவோடு வாழ்ந்த ஹேமாவதி,மகன் சந்திரவர்மனை வீராதிவீரனாக வளர்த்த பின் விண்ணுலகம் சேர்ந்தாள்.
சந்திரவர்மன் மாமன்னனாகி, சந்தல அரசு வம்சத்தைத் தோற்றுவித்தான். அவன் முன் தெய்வீக உருவில் வந்த ஹேமாவதி "காமம் என்பது வெறும் மாயை என்பதை உணர்த்தும் கோவில்களை கட்டு" என்று உத்தரவிட்டாள்.
அதன்படி கஜீரோகாவின் முதல் கோவிலை கி.பி 950-ல் கட்டினான் சந்திரவர்மன். அவனது வம்சத்தினரும் இதே ரீதியான கோவில்களைக் கட்டினர். நூறு ஆண்டுகளாக,அதாவது கி.பி.1050 வரை மொத்தம் 85 கோவில்கள் அவ்வாறு கட்டப்பட்டன.கஜீரோகா கோவில்கள் "காமம் மாயம்"என்றாலும் "அன்பேகடவுள்" என்றுதான் போதிக்கிறது.
காமம் அன்பாக மாறாத வரை அது வெறும் விபச்சாரம்தான். ஒரு உண்மை விஷயத்தை கேளுங்கள். நாற்பது வயதை நெருங்கும் "அமல்" என்பவர் ஓர் மருத்துவர். சில மாதங்களுக்கு முன் ஆராய்ச்சி தொடர்பாக வெளிநாடு சென்றிருந்தார் அமல். அந்த காலக்கட்டத்தில் அமலின் மனைவிக்கு வேரு ஒருவருடன் படுக்கைவரையிலான உறவு ஏற்பட்டது.
விஷயத்தை அறிந்த அமலும் அவரது மனைவியும் சுமூகமாகப் பிரிந்துவிட்டனர். இருப்பினும் அந்த அதிர்ச்சி இன்னும் அமலை விட்டு அகலவில்லை. "எங்களுக்கு மிக சிறந்த திருமண வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று நினைத்திருந்தேன் நான்" என்கிறார் அமல். அந்த ஏமாற்றம் அவரது கண்களிலும் தெரிந்தது. "நாங்கள் ஒரு தடவைக் கூட சண்டை போட்டதில்லை,ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதாகத் தான் உணர்ந்தோம்.
கடைசி காலம்வரை இப்படியே அமைதியாக கழிந்துவிடும் என்று நினைத்தேன்" என்றார். திடீரென்று என்னுடைய மனைவி "நம்முடைய வாழ்வில் நாம் எதையோ இழக்கிறோம்" என்று கூறியபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை என்கிறார் அமல் இன்னும் புதிர் புரியாதவராய்.
இந்தத் திருமண வாழ்க்கை முறிந்த நிலையில் மீண்டும் திருமணம் செய்துகொள்ள அமல் தயாராக இல்லை. "அவளால் என்னை ஏமாற்ற முடியும் என்றால்,என்னால் எப்படி இன்னொரு பெண்ணை நம்ப முடியும்?" என்று கசப்பாய் கேள்வி எழுப்புகிறார்.
கணவன்-மனைவி இடையிலான நம்பிக்கை துரோகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவலில்,அந்த ஆசிரியர் குறிப்பிடுகிறார் "இரண்டு பேர் திருமணத்தில் இணைகிறபோது ஒருவருக்கொருவர் உண்மையான அன்போடு நகையும் சதையுமாக இருக்க வேண்டும்" என்ற எண்ணத்துடனே கரம் பற்றுகிறார்கள்.
ஆனால் ஒரே நபருடன் நாட்களைக் கழிக்கின்ற நிலையில் பல ஏற்ற இறக்கங்கள் தோன்றுகின்றன. பொதுவாக இவை இயல்பானை என்று எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
பெரும்பாலானவர்கள் "வாழ்வில் இதெல்லாம் சகஜம்" என்று கருதுகின்றனர். ஆனால் வாழ்க்கையின் ஏற்றங்களை விட இறக்கங்களில் துணைகளில் ஒருவர் அதிக கவனம் செலுத்தும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
நன்றி : வி சி . வடிவுடையான்.
http://vcvadivudaiyan.com/blog/?p=௮௧௮
http://tamil-cininews.blogspot.com
http://tamil-cininews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?