தெய்வத் திருமகளில் அனுஷ்காவோடு நடிச்சீங்க... ராஜபாட்டையில் தீக்ஷா சேத்துடன் நடிக்கிறீங்கள்... இவங்க ரெண்டு பேர்ல யார் டாப்?
எடுத்த எடுப்பில் இப்படியொரு கேள்வியை நிருபர்கள் கேட்க கொஞ்சம் ஆடித்தான் போனார் விக்ரம், ராஜபாட்டை பத்திரிகையாளர் சந்திப்பில்.
ஆனாலும் அவரது பதிலில் அநியாயத்துக்கு யதார்த்தம் வழிந்தது.
"நிச்சயமா அனுஷ்காதான் பெஸ்ட். காரணம், அனுஷ்காவோட நடிப்புத் திறமை நிரூபிக்கப்பட்ட ஒன்று. தீக்ஷா இப்போதான் நடிக்க வந்திருக்காங்க. அழகில் அனுஷ்காவுக்கு இணையா தீபிகா இருக்கலாம். ஆனால் நடிப்பில் அனுஷ்காதான் டாப்.
வேணும்னா இன்னும் சில படங்கள் தீக்ஷாவோட நடிச்ச பிறகு அவங்க நடிப்புத் திறமை பத்தி சொல்றேன்," என்று விக்ரம் கூற, கைதட்டி அதை ஏற்றுக்கொண்டார் பக்கத்திலமர்ந்திருந்த தீக்ஷா சேத்.
ராஜபாட்டை படம் பற்றி விக்ரம் கூறுகையில், "ஒரு பக்கம் பிதாமகன், தெய்வத் திருமகள் மாதிரி படங்களில் நடிச்சாலும், தில், துள், சாமி மாதிரி முழு கமர்ஷியல் படத்தில் நடிக்கணும்னு எனக்கு நிறைய ஆசை.
ஆனால் அது வெறும் கமர்ஷியல் மசாலாவா இல்லாமல் நல்ல கதையோடும் இருந்தால்தான் மக்களிடம் மரியாதையான வரவேற்பிருக்கும். அந்த மாதிரி ஒரு கதைக்காக காத்திருந்த போதுதான் சுசீந்திரன் வந்து இந்த கதையை சொன்னார்.
அவருடைய முந்தைய படங்களையெல்லாம் பார்த்தவர்கள் இந்த படத்தை பார்த்தால் இது சுசீந்திரன் படம்தானா என்பதை நம்பவே மாட்டார்கள். அவருக்குள் அப்படியொரு கமர்ஷியல் டைரக்டர் இருக்கிறார்," என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, "அஞ்சு பாட்டு, நாலு பைட்னு படத்தின் பெரும்பகுதியை டான்ஸ் மாஸ்டரும், பைட் மாஸ்டரும் பிரிச்சிக்கிட்டாங்க. நான் அவங்க வேலையை மேற்பார்வை பார்த்தேன் என்பதுதான் சரி. ஆனால் இந்தப் படம் வெறும் கமர்ஷியல் எல்லைக் கோட்டை தாண்டி, பேச வைக்கும்," என்றார்.
பிவிபி சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய இனிய அனுபவம் காரணமாக, மீண்டும் சுசீந்திரனுக்கே கால்ஷீட் தந்துள்ளார் விக்ரம்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?