கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்துப் பத்திரிகையின் பிரதம எழுத்தாளர் ராம் அவர்கள் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் என அறிகிறது. சில காலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சிங்கள ஆட்சியாளர்களை சஞ்சலத்தில் ஆழ்த்தியவர் இந்த இந்து ராம் ஆவார். இவர் அடிப்படையாகவே ஒரு இலங்கை அரசின் நலன் விரும்பி ஆவார். ஆனால் சமீபகாலமாக கோத்தபாயவைப் பற்றி இவர் எழுதிய சில செய்திகளும் பிற சிங்கள அமைச்சர்களைப் பற்றி எழுதிய செய்திகளும் இலங்கை அரசை சங்கடத்தில் ஆழ்த்தியது. இல்லை அப்படி அழ்த்தியது போல இலங்கை அரசு நடித்திருக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சற்று சாதகமாக இவர் பேசுவதுபோல ஒரு தோற்றப்பாடு கொண்டுவரப்பட்டபோதே எல்லோரும் நினைத்தார்கள் இவர் என்ன மாறிவிட்டாரா என்று.
அது எல்லாம் ஒன்றும் இல்லவே இல்லை. அவர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்ததும் அதன்போது அவர் தமிழர் தரப்பைச் சந்திக்க விருப்பதும் இலங்கை அரசால் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னர் திட்டம் தீட்டி வைக்கப்பட்டிருந்த விடையம். இலங்கையில் இந்திய -இலங்கை சமூகக் கூட்டம் நடத்துவது என்பது இலங்கை அரசால் பல மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவு. அதற்கு ராம் அவர்கள் வருவதாக ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு இருந்தது. அவர் சிங்கள ஆதரவு முகத்துடன் இலங்கை வந்தால் அங்கே அவர் தமிழர் தரப்புடன் பேசும் பேச்சு எடுபடாது என நினைத்த சிங்களம் ராமுடன் கலந்தாலோசித்து சில சிங்கள எதிர்ப்புச் செய்திகளை ராமின் பத்திரிகை மூலம் வெளியிட்டது.
இதனால் இலங்கை அரசு ஏதோ கடுங்கோபம் கொண்டுள்ளது போல நடித்தது. ஆனால் இறுதியில் நேற்று முந் தினம் அவர் கொழும்பு சென்று விழாவில் கலந்துகொண்டு பல அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் சந்தித்துள்ளார். இலங்கையில் அவருக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட ராம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்து நெடு நேரமாக உரையாடி பல அறிவுரைகளையும் வழங்கினாராம். அதில் ஒன்று என்ன தெரியுமா ? பூனை கறுப்பாக இருந்தால் என்ன வெள்ளையாக இருந்தால் என்ன அது இறுதியில் எலியைப் பிடிக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று சீனத் தலைவர் டெங் ஸியாம்பொங்கின் கூறியதை இந்த மணி கட்டிய பூனைகளுக்கு சொல்லிச் சிரித்தாராம்.
யார் வெள்ளைப் பூனை யார் கறுப்புப்பூனை யார் எலி என்று எல்லாம் எங்களிடம் கேட்கவேண்டாம் வாசகர்களே ! அது இந்து ராமுக்குத் தான் வெளிச்சம்.
அதிர்வு
http://actressmasaala.blogspot.com
http://actressmasaala.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?