ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி, பொதுச்சபையில் உரையாற்றிய பின்னர் நாளை பாகிஸ்தான் திரும்ப உள்ளார்.
முன்னதாக ஐநா பொதுச்சபை கூட்டத்துக்கு பாகிஸ்தான் சார்பில் கிலானி தலைமை வகித்துச் செல்வதாக இருந்தது. எனினும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரை சந்திக்க அனுமதி தராததால் தனது பயணத்தை கைவிட்டார் கிலானி. இதையடுத்து ஹினா ரப்பானி பாகிஸ்தான் குழுவுக்கு தலைமையேற்றுச் சென்றார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்கு ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதையடுத்து ஹினா ரப்பானியை உடனே நாடு திரும்புமாறு கிலானி உத்தரவிட்டிருந்ததாக செய்திகள் வெளியாயின.
எனினும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய பின்னர்தான் ஹினா ரப்பானி பாகிஸ்தான் திரும்புவார் என அந்த நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
http://actressmasaala.blogspot.com
http://actressmasaala.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?