பஹ்ரைனில் எனது நண்பர்களிடையில் நடந்த சம்பவம்.
இரண்டாவது ஷிப்ட் டியூட்டி முடிவதற்குள் நண்பர்கள் இருவரும் போனில் பேசிக்கொண்டார்கள் இன்றைக்கு நாம் சரக்கடிக்கலாமென்று, ஏனெனில் கம்பெனி ஒன்றுதான் ஆனாலும் ஹோட்டல் வேறே வேறே, தங்குமிடமும் ஒன்றுதான். ஒரு பில்டிங் முழுவதும் எங்கள் ஸ்டாஃப்தான் தங்கி இருந்தார்கள்.
அதில் ஒரு நண்பன், டேய் நான் டியூட்டி முடிஞ்சி வரும்போது நானே பாட்டல் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லவும் ஓகே ஆனது. அப்படியே அவன் வரும்போது பாட்டல் வாங்கிக்கொண்டு வருகையில், மற்றொரு கையில் திராட்சை பழம் இருப்பதை கண்டு, என்னடா நாம் குடிக்கும் ஐட்டமே திராட்சை பழத்தில் செய்ததுதானே எதுக்கு இதை வாங்குனேன்னு கேட்க, அப்புறமா சொல்றேன்னு சொல்லி ரூமுக்கு வந்தானுக.
குளித்து முடித்து ரெடியாகி [[[ஸ்ஸ்ஸ்பா]] , கிளாஸ் சைடிஸ்ட் இத்யாதிகளை கையில் எடுத்துக்கொண்டு [[பின்னே கால்லையா எடுத்துட்டு போவாங்க]] மொட்டைமாடியில போயி உக்கார்ந்து மேட்டரை ஆரம்பிக்க, ஒரு ஃபுல்லும் காலி அதோடு திராட்சை பழமும் காலி....
என்னடா ஒரு ஃபுல் அடிச்சும் ஒன்னுமே ஏறலையே ன்னு ஒருத்தன் கேட்க, டேய், நான் எதுக்கு திராட்சை பழம் வாங்கிட்டு வந்தேன்னு நினைச்சே ஹி ஹி போதை ஏறக்கூடாது என்பதற்குதான், அட நாதாரி சரக்கு அடிப்பதே போதை க்குதானே கிறுக்கு பயலேன்னு தி ட்ட...
சரி இப்போ என்னபண்ண...? ஹி ஹி இன்னொரு ஃபுல்லு ஆர்டர் பண்ணுவோ ம், அதுக்குதானே அந்த திராட்சை பழம். ஆர்டர் பண்ண, பாட்டலும் வந்தது, நிற்க, என்னடா பஹ்ரைன்ல வீட்டுல இருந்து ஆர்டர் பண்ணுனா சரக்கு கிடைக்குதான்னு நீங்க கேக்குறது புரியுது, பொதுவா பஹ்ரைன்ல காசு இருந்தா என்ன வேணுமோ வீட் டுக்கே வந்துரும், ஒரு போன் போட்டா போதும்...!!!
அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சானுக, போதை ஏற ஏற உக்காரப்பிடிக்காமல் படுத்துட்டே சரக்கடிக்க, பசியும் வந்தது. என்னடா பண்றது, சரி ஆர்டர் பண்ணுவோம்னு சொல்லிட்டே இருக்கவும், இவர்கள் மேலே இருந்து சரக்கடிப்பதை அறிந்த இன்னொரு நண்பன், அவனிடமிருந்த சாப்பாட்டை கொண்டு வந்து கொடுத்தான்.
நன்றி சொல்லி வாங்கிவிட்டு, நண்பா நீ கொஞ்சம் சரக்கடிக்கிறியா..? வேண்டாம்டா சாமீ'ன்னு அவன் ஓட, வேட்டை ஆரம்பமானது, சரக்கடிச்சுகிட்டே சாப்பிட ஆரம்பித்தார்கள். இருட்டு வேற, டேய் மக்கா சாப்பாடு ஷஊப்பரா இருக்கில்லே, ஆமாடா ஷஊப்பரா இருக்கு, என்ன இலுந்தாலும் அச்சொகன் [[அசோகன்]] ஸாப்பாடு ஷாப்பாடுதான் லில்லியா [[இல்லையா]]
டேய் சிக்கன் கறி அல்லகாசம் [[அட்டகாசம்]] அடுத்தவன், பேமானி இது சிக்கன் இல்லைடா மட்டன் கறி என்று பீசை சாப்புட்டுட்டே... மாறி மாறி தர்க்கமே வந்துருச்சி, எழும்பி போகவும் முடியாது [[ஃபிட்டு]] , டேய் சிக்கன் என்று இவன் எலும்பை காட்டி சொல்ல, அவன் இல்லை இல்லை இது மட்டன்தான்னு எலும்பை காட்ட....!!! [[கடைசி பாராவை படிச்சுட்டு மறுபடியும் இதை படிச்சு பாருங்க]]
குடிச்சி கும்மாளம் போட்டு குழஞ்சி குழஞ்சி டான்ஸ் வேற போட்டு, குத்தாட்டம் ஆட ஆட, போதை லேசா இறங்க ஆரம்பிக்கவும், வானம் வெளுக்கத் தொடங்கியது, சரிடா ரூமுல போயி உறங்குவோம்னு கிளம்பினவனுங்களுக்கு, ஒரு டவுட் வர...
நல்ல பொழுது விடிந்து விட்டது, சாப்பிட்ட இடத்தையும் பாத்திரத்தையும் பார்த்த அவர்களுக்கு சிரிப்போ சிரிப்பு, காலையிலேயே நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மென்டே அவர்கள் சிரிப்பு அதிர வைத்தது, என்னான்னு கேக்குறீங்களா....???
அங்கே கீழே, இவர்கள் சாப்பிட்டு கடிச்சி துப்பி இருந்தது........"மீனின் முள்"............!!!
ஹா ஹா ஹா ஹா இதை இப்பவும் நண்பர்கள் சந்திக்கும் போது சொல்லி சிரிப்போம் ஹே ஹே ஹே ஹே.....!!!
ஸ்பெஷல் டிஸ்கி : [[விஜயகாந்த் ஸ்டைலில் படிக்கவும்]] ஏய்......எனக்கு பின்னூட்டத்தில் கமெண்ட்ஸ் போடுவதென்பது சாதாரணம், அதே நேரம் ஒட்டு போடுவது என்பது சர்வ சாதாரணம்.
நீதி : மரியாதையா பாம்புக்கு பயந்து ஓட்டு போட்டுட்டு போங்க....
http://tamil-cininews.blogspot.com
http://tamil-cininews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?