பல்பொருள் அங்காடி வைத்திருந்து பின்னர் மின் உபகரண கடைகள் என தனது வியாபாரத்தை விஸ்தரித்துள்ள வசந் அன் கோ நிறுவன தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றையும் ஒளிபரப்பி வருகிறது. அதில் அடிக்கடி ராஜீவ் கொலையைக் காண்பித்து சம்பந்தப்பட்ட மூவரையும் தூக்குலிடவேண்டும் என அது பிரச்சாரங்களை முடிக்கிவிட்டுள்ளது. காங்கிரசுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுகாக ஒரு ஊடகத்தை தவறாகப் பயன்படுத்திவருகிறார் என்ற புகார்களும் தமிழ் நாட்டில் எழுந்துள்ளது.
இனி அவர் நடத்தும் கடைகளில் காங்கிரசார் மட்டும் தான் சென்று பொருட்களை வாங்கவேண்டிய நிலை தோன்றலாம் எனவும், சாதாரண பொதுமக்கள் இவர் கடைகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுவார்கள் எனவும் தமிழ் உணர்வாளர்கள் கூறிவருகின்றனர். இவரைப் போன்ற சில தமிழர்களின் நடவடிக்கை தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?