சோனாவுக்கும், எஸ்.பி.பி.சரணுக்கும் இடையே நடக்கும் காம யுத்தத்திற்கு இடையே சமாதானம் பேச இசைஞானி இளையராஜா மறுத்து விட்டாராம். மது விருந்து பார்ட்டியில் பங்கேற்ற தன்னை, பாலியல் சில்மிஷம் செய்து செக்ஸ்சுக்கு அழைத்ததாக தயாரிப்பாளரும், பிரபல பாடகரும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனுமான எஸ்.பி.பி.சரண் மீது கவர்ச்சி நடிகை சோனா போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கான வீடியோ ஆதரங்களை கொடுத்து, எஸ்.பி.பி.சரணை எப்படியாவது சிறையில் தள்ள வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் சரணோ, 2 வார காலத்துக்கு கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் பெற்றிருக்கிறார்.
இந்த இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டிருப்பவர் எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியன்தான். சோனாவிடம் அவர் போய் சமாதானம் பேசியதாக முதலில் தகவல்கள் வெளியாயின. ஆனால் சோனா அளித்த பேட்டியில், எஸ்.பி.பி. பாலசுப்பிரமணியம் ரொம்ப நல்லவர். அவர் இன்னமும் என்னை வந்து சந்திக்கவில்லை; சந்தித்து பேச விரும்புவதாக கூறியிருந்தார்.
நீதிமன்ற தடையாணை அமலில் இருக்கும் நேரத்தில் சோனாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்துக் கொள்ளலாமே என்று மகனுக்கு அட்வைஸ் செய்கிறாராம் அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆனால், நீங்க அமைதியா இருங்க என்கிறாராம் சரண். யார் சொன்னால் மகன் கேட்பார் என்று தடுமாறிய எஸ்.பி.பி. இசைஞானி இளையராஜாவிடம் பேசியதாக கூறப்படுகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் அல்லவா? நீ சொன்னா அவன் கேட்பான். கொஞ்சம் பேசிப் பாரேன் என்றாராம் இசைஞானியிடம்.
இந்த காலத்து பசங்க அவங்கவங்க போக்குக்கு நடந்துக்கிறாங்க. அவங்களுக்கு அட்வைஸ் பண்ணினா அது நமக்குதான் தகுதி குறைவா முடியும். அதனால் என்னால் பேச இயலாது என்று கூறி மறுத்து விட்டாராம் இசைஞானி.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?