Friday, 7 October 2011

தமிழீழ அரசாங்கத��தின் பிரதமர் ஹவானா ரைம்ஸ் இதழுக்���ு வழங்கிய செவ்வ��!



ஹவானா ரைம்ஸ் செய்தி இதழின் செய்தியாளர் றொன் றிடெநொயருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் ஒக்ரோபர் 3 ம் திகதி அன்று வழங்கிய செவ்வியின் சில முக்கியமான பகுதிகளின் தமிழாக்கம் வருமாறு:

சிறிலங்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழர்களாகிய நாம் இன்னமும் நமக்கென தனியான ஒரு நாட்டையே விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் மீதான மகிந்த இராஜபக்ஷ அரசின் போர்க்குற்றங்களின் மோசமான குரூரத்தன்மை நன்கு அறியப்பட்டு வருவதனால் எமது கோரிக்கை உலகளாவிய அளவில் இன்று பேசப்பட்டு வருகின்றது.' இவ்வாறு விசுவநாதன் ருத்திரகுமாரன் என்னிடம் அண்மையில் நியூ யோர்க் நகரில் தெரிவித்தார்.

அதிர்ச்சி தரத்தக்க சனல் 4ன் ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள் முதலில் யூன் மாதம் ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பிலும் பின்னர் உலகம் முழுவதும் காண்பிக்கப்பட்டு வருவது தமிழரின் உரிமைகள் அங்கிகரிக்கப்பட்டு வருவதற்கு அடையாளமாக உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமாரன விசுவநாதன் ருத்திரகுமாரன், புலம்பெயர்ந்த தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வருபவர்களில் முக்கியமான ஒருவர். கொழும்பு பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் உள்ள சவுத் மெதடிஸ்ற் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ள ருத்திரகுமாரன், ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் சுயநிர்ணய உரிமை பற்றி ஆய்வு செய்து ஆய்வுரைகளை வெளியிட்டிருந்தார்.

சிறிலங்காவின் நீண்ட உள்நாட்டு போர் மே 2009ல் முடிவுக்கு வந்தபோது, தமிழரின் இறையாண்மைக்கான தேவையை ருத்திரகுமாரன் கண்டுகொண்டார். அதேவேளை சுவிற்சலாந்திலும் மலேசியாவிலும் உள்ள அறிவாளர்கள் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவினார்கள்.

இவ்வாறாக புலம்பெயர்ந்த தமிழர் தலைவர்கள் தமக்கான ஆதரவை திரண்டெழுப்பி வரும் நிலையில், மே 2009ல் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் கூட்டத்தில் கியூபாவிலும் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் உள்ள முற்போக்கான அரசுகள் சிறிலங்காவை ஆதரித்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆதரவு தமிழரின் விடுதலைப் போராளிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல முற்றான தமிழ்மக்களின் விருப்பங்களுக்கும் எதிரானதுமாகும்.

தமிழர் என்றும் பிடல் காஸ்ரோவையும் சே குவாராவையும் வீரம் செறிந்த போராளிகளாக போற்றிவந்திருக்கிறார்கள்.' என பிரதமர் குறிப்பிட்டார். மே 2009ற்கு பின்பான கியூபாவின் நிலைப்பாடு தமிழ்மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒருவேளை இது போதிய அளவில் இடம்பெறாத கருத்து பரிமாற்றங்கள் காரணமாக இருக்கலாம். ஆகவே நாம் கியூபாவுக்கும் வெனிசியுலாவுக்கும் லத்தீன் அமெரிக்க மக்களின் பொலிவியன் கூட்டமைப்பை சேர்ந்த ஏனைய அரசுகளுக்கும் ஒரு தூதுக்குழுவொன்றை அனுப்பி எமது நிலைப்பாடு பற்றி எடுத்து கூறி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட ஆவலாக இருக்கிறோம்' என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

எந்தவொரு அரசாங்கத்துடனும் அல்லது சர்வதேச சக்தியுடனும் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படவில்லை' என குறிப்பட்ட பிரதமர் ருத்திரகுமாரன் தமது நோக்கத்துக்கு ஆதரவு தருபவர்களுடன் ஒத்துழைக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.

மக்களின் தெரிவின் அடிப்படையில் முடிவெடுப்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. கடந்த 2010 இளவேனிற் காலத்தில் 12 நாடுகளிலிலுந்து தேர்தல்கள் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த தேர்தல்களில் பங்குபற்றினர்.

55 பிரநிதிகள் அமெரிக்காவில் உள்ள பிலடல்பியா நகரில் கூடி மே 17-19 2010ல் நாடுகடந்த அரசாங்கத்தின் சட்டசபையை உருவாக்கினர். மேலும் 30 பிரதிநிதிகள் லண்டனில் இருந்தும் ஜெனீவாவில் இருந்தும் வீடியோ மூலம் பங்குபற்றினர்.

ஹவானா ரைம்ஸின் செய்தியாளர் றொன் றிடெநொயர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகள் பற்றியும் விபரித்தார். ஆயுதப் போராட்டத்தின் வரலாறு பற்றி குறிப்பிட்டு, தமிழ் மக்களுக்கு விடுதலைப்புலிகள் போராடுவதற்கான பலத்தையும் தன்மானத்தையும் பெற்றுத் தந்திருப்பதாகவும் இன்று போராட்டம் இராஜதந்திர தளத்தில் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் இரு சர்வதேச தமிழர் அமைப்புகளுடன் சிறப்பான உறவை வளர்த்துக்கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்ட பிரதமர் ருத்திரகுமாரன், இந்த அமைப்புகள் உலகத் தமிழர் பேரவையும், ஐரோப்பாவின் ஈழத்தமிழர் அமைப்பு எனவும் குறிப்பிட்டார்.

எமது நோக்கம் ஒன்றே அதை அடைவதற்கான எமது வழிகளும் ஒன்றே ஆயுதம் ஏந்தாத இராஜதந்திர வழிகள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் என்ற அளவிலேயே நாம் எமது நட்பு அமைப்புகளில் இருந்து வேறுபடுகிறோம் என்று பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.

தென் சூடானில் இடம்பெற்ற வாக்கெடுப்பு மூலமான விடுதலை தமக்கு உற்சாகமளிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் ருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் துணை வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகரும் பிரதமர் செயலகத்தின் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கமும் தென் சூடானின் அதிபராக சல்வா கீர் பதவியேற்ற நிகழ்வில் பங்குகொண்டதாக குறிப்பிட்டார்.

எமது இராஜதந்திர முயற்சியின் நோக்கம் தென் சூடான் போல எமது மக்களும் ஈழத்தில் ஒரு கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் தமது எதிர்காலத்தை தீர்மானிக்க சர்வதேச சமுகம் உதவ செய்வதே என தெரிவித்தார்.

ஹவானா ரைம்ஸின் செய்தியாளர் றொன் றிடெநொயர் பிரதமர் ருத்திரகுமாரன் பற்றி தெரிவிக்கையில், அவருக்கு வல்லரசுகளினதும் இன்றைய மற்றும் முன்னாள் ஏகாதிபத்தியங்களினதும் நோக்கங்கள் பற்றி எந்த மயக்கமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எமது ஒன்றுபட்ட இறையாண்மைக்கான நோக்கத்தை நாம் என்றும் விட்டுக்கொடுக்க போவதில்லை. அது எமது ஆற்றலிலும் உறுதிலும் தங்கியுள்ளது. எமது போராட்டம் எமது தேசியத்துக்கானது. இது வேறு எந்த இலட்சியம் பற்றியதோ அல்லது பொருளாதார அடிப்படையிலானதோ அல்ல' என பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger