வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக நீண்ட காலமாக அங்கிருந்த படையினரின் காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த மக்களின் மீள்குடியேற்றம் நேற்று செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என மக்கள் குறைகூறியுள்ளனர்.
உயர்பாதுகாப்பு வலயமான பலாலிக்கு அண்மையிலுள்ள குரும்பசிட்டிக் கிராம மக்கள் 21 வருடங்களின் பின்னர் நேற்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள குரும்பசிட்டி ஜே242 மற்றும் குரும்பசிட்டி கிழக்கு ஜே243 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 100 குடும்பங்கள் நேற்றையதினம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பொன் பரமானந்தா மகா வித்தியாலயம், ஆலயங்கள் என்பனவும் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குரும்பசிட்டி வசாவிளான் வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.முரளிதரன், உதவி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம் உட்பட இராணு அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?